in

குறைவடைகிறது கோதுமை மாவின் விலை

எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா தற்போதைய நிலையில் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது.

துறுக்கி மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது.

நாட்டின் பிரதான கோதுமை மா விநியோக நிறுவனங்கள் இரண்டும், கடந்த காலங்களில் இறக்குமதிகளை நிறுத்தியிருந்தன.

இதனால், கோதுமை மா தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், அதன் விலைகள் 300 முதல் 400 ரூபா வரையில் அதிகரித்தது.

இந்நிலையில், மீண்டும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வார இறுதியில் பாரிய தொகை கோதுமை நாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால் கோதுமை மாவின் விலை குறைவடையும் வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது. (CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

வைத்தியர்கள் குழுவொன்று ஓய்வு – சுகாதாரத் துறையில் சிக்கல்?

அத்தியவசிய பொருட்கள் சிலதின் விலை குறைகிறது