
புத்தளம் Oxford முன்பள்ளி பாலர் பாடசாலையின் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் தலைமை ஆசிரியை ஆயிஷா பானு தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக நகரசபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீன் மற்றும் கிராம உத்தியோகத்தர் ரஸ்மி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றும்போது தலைமை ஆசிரியை மறைந்த தலைவர் மர்ஹும் கே.ஏ.பாயிஸ் அவர்களின் வழியில் தொடர்ந்தும் முன்பள்ளி ஆசிரியைகளுக்கான கொடுப்பனவுகளையும் பாலர் பாடசாலை அபிவிருத்திகளுக்கான தொடரான ஒத்துழைப்புக்களையும் வழங்கி வரும் தற்போதைய நகரபிதாவின் சேவைகளை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
நகரபிதா உரையாற்றுகையில் முன்பள்ளி கல்வியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன் குறித்த முன்பள்ளி பாலர் பாடசாலையை அண்மித்த பகுதிகளில் பற்றைகள் வளர்ந்து காணப்படுவதால் சிறார்களின் சுகாதாரத்துக்கு ஒவ்வாத சூழலை தாம் அவதானித்ததாகவும் அதனை இன்னும் சில தினங்களில் அகற்றி சீர்செய்து தருவதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வில் சிறார்களுக்கு அதிதிகளால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



