in

காத்தான்குடியில் இராணுவத்தினரின் சிரமதானப் பணி

B.M.பயாஸ்(ஊடகவியலாளர்)

காத்தான்குடி கடற்கரையினை சுத்தப்படுத்தும் சிரமதானப் பணியொன்று இராணுவத்தின் ஏற்பாட்டில் (24) திகதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – குருக்கள் மடம் இராணுவ முகாம் கட்டளைத் தளபதி மேஜர் அசேல.யாப்பா தலைமையில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வில் இராணுவ வீரர்கள் மற்றும் காத்தான்குடி நகர சபை ஊழியர்கள் இணைந்து சிரமதானத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கடற்கரையில் காணப்பட்ட உக்கக் கூடிய மற்றும் உக்காத கழிவுகள் பைகளில் சேகரிக்கப்பட்டதுடன், அவற்றை காத்தான்குடி நகரசபை சுத்திகரிப்பு வாகனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை சிறுவர்கள் பயன்படுத்தி வரும் சிறுவர் பூங்காக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்ற கடற்கரைப் பகுதிகள் என்பன துப்பரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நேற்றைய ஆர்ப்பாட்டம் சட்ட விரோதமானது – பொலிஸ் அறிவிப்பு

வைத்தியர்களினதும் ஊழியர்களினதும் அலட்சியம் – 30 மில்லியன் நட்டஈடு