in

கோட்டைக்கும், கண்டிக்கும் இடையிலான புதிய ரயில் சேவை

கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையிலான ‘கண்டி ஒடிஸி’ ரயில் சேவையை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று ஆரம்பித்து வைத்தார்.

கண்டி பல்லக்கு ஆலயம் மற்றும் பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

‘கண்டி ஒடிஸி’ ஒவ்வொரு வார இறுதியிலும் இயங்கும். அத்துடன் கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு 9.18 மணிக்கு கண்டியை சென்றடையும்.

இந்த ரயில் கண்டியில் இருந்து மாலை 4.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும் அதேவேளை ரயில் பயணத்தின் காலம் 02 மணி 48 நிமிடங்கள் ஆகும்.

முதல் வகுப்பு டிக்கெட் ரூ.2000/- மற்றும் 2ஆம் வகுப்பு டிக்கெட் ரூ.1500/- ஆகும். (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வைத்தியர்களினதும் ஊழியர்களினதும் அலட்சியம் – 30 மில்லியன் நட்டஈடு

லிட்ரோ சிலிண்டரின் விலை குறைவடைகிறது