in

CuteCute LoveLove

ஆரயம்பதியில் YESDO மின்னொளி கிரிக்கட் சுற்றுப் போட்டி

B.M.பயாஸ்(ஊடகவியலாளர்)

YESDO அமைப்பின் ஏற்பாட்டில் 2005 (O/L) Batch நண்பர்களிடையே நடாத்தப்பட்ட சினேகபூர்வ கிரிக்கட் சுற்றுப் போட்டி கடந்த சனிக்கிழமை(3) இரவு ஆரையம்பதி விளையாட்டு மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றது.

அணிக்கு 11 பேர் கொண்ட 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இச் சுற்றுப் போட்டியில் MOON FIRE, GOLD STAR மற்றும் SUN SHINE ஆகிய மூன்று அணிகள் பங்குபற்றின.

இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய MOON FIRE மற்றும் GOLD STAR அணிகள் இடையே ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய MOON FIRE அணி 8 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 57 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய GOLD STAR அணி 4 ஓவர்கள் நிறைவில் விக்கட் இழப்பின்றி 58 ஓட்டங்களைப் பெற்று சுற்றுப் போட்டியின் சம்பியன் Champion கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

மேற்படி போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக A.N.M Nabris அவர்களும் சிறந்த பந்து வீச்சாளராக M.H.M Nisfar ஆகிய வீரர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கோதுமை மாவின் விலை குறைகிறது?

தியத்தலாவை பத்ரியாவில் மாணவத் தலைவர்கள் நியமனம்