in

அசல் போல போலி வட்சப் – அவதானமாக இருங்கள்

உலகளவில் WhatsApp பிரபலமான ஆப் செயலியாகத் தான் இருக்கிறது. ஆனாலும் கூட, மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த வாட்ஸ்அப்பை உலகம் பூராகவும் மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

WhatsApp அதிகமாகப் பிரபலமடையத் தொடங்கிய நேரத்தில் இருந்தே, இந்த ஆப்ஸ் மீது மோசடிக்காரர்கள் படையெடுக்கத் துவங்கிவிட்டார்கள்.

WhatsApp பிரபலமடைந்த பிறகு அதில் உள்ள சிக்கல்களும், ஆபத்துகளும் சில காலமாக அதிகரிக்கத் துவங்கியுள்ளது. குறிப்பாக, இப்போது வாட்ஸ்அப் பயனாளர்களுக்கான பாதுகாப்பு சிக்கல்கள், வாட்ஸ்அப் போன்ற ரூபத்தில் பல மக்களை ஏமாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆம், வாட்ஸ்அப் போன்ற போலியான குளோன் செய்யப்பட்ட Fake WhatsApp மூலம் பெரிய ஆபத்தான வலையில் பொதுமக்கள் சிக்கி ஏமாறுகிறார்கள் என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குளோன் வாட்ஸ்அப் (Clone WhatsApp) என்றால் என்ன?
WhatsApp இலவசமாகக் கிடைக்கும் இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் ஆப்ஸாக (Free Instant Messaging Apps) இருந்தாலும் கூட, வாட்ஸ்அப் போன்ற பல குளோன் செய்யப்பட்ட வாட்ஸ்அப் பயன்பாடுகள் ஆன்லைனில் பயன்படுத்தக் கிடைக்கின்றன. இந்த குளோன் வாட்ஸ்அப் (Clone WhatsApp) பயன்பாடுகள் வாட்ஸ்அப்பில் தற்போது கிடைக்கும் அனைத்து அம்சங்களுடன் சேர்த்து, வாட்ஸ்அப்பில் இல்லாத சில அம்சங்களை வழங்குகின்றன. இந்த காரணத்தினால் தான் பலர் கூடுதல் அம்சங்களைப் பயன்படுத்த ஆசைப்பட்டு, சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள்.

அப்படி, அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட குளோன் வாட்ஸ்அப் செயலி தான் இந்த ‘GB WhatsApp’ என்ற ஆப்ஸ் ஆகும். இதைப் பொதுமக்கள் பலர், இதை அசல் வாட்ஸ்அப் நிறுவனத்தின் மற்றொரு வெர்ஷன் என்று தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்கள். வாட்ஸ்அப் பிஸ்னஸ் (WhatsApp Business) மட்டுமே வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு சொந்தமானது. ஆனால், இது மூன்றாம் தரப்பு நபர்களால் நிறுவப்பட்ட WhatsApp குளோன் செயலி என்பதே உண்மையாகும். இது மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமானதல்ல என்பதை முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

T2 2022 அச்சுறுத்தல் அறிக்கையில் இந்தியா அதிக ஆண்ட்ராய்டு ட்ரோஜன் தாக்குதல்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் GB WhatsApp பதிவிறக்கம் செய்யக் கிடைப்பதில்லை.

GB WhatsApp எதையெல்லாம் கண்காணிக்கிறது தெரியுமா?

சில கூடுதல் நன்மைகளுக்காக ஆசைப்பட்டு இந்த GB WhatsApp செயலியைப் பயன்படுத்தியவர்கள் நிலை இப்போது ஆபத்தில் உள்ளது.GB WhatsApp பயன்படுத்தும் பயனாளர்களுக்குத் தெரியாமல் இந்த ஆப்ஸ் ஆடியோ மற்றும் வீடியோவை சாதனத்தில் பதிவிறக்கம் செய்யக்கூடிய மால்வேர் பைல்களை இந்த ஆப்ஸ் கொண்டுள்ளது. அதேபோல், GB WhatsApp இன்ஸ்டால் செய்யப்பட்ட சாதனத்தில் செய்யப்படும் பிற செயல்பாடுகளையும் இந்த ஆப்ஸ் உளவு பார்க்கிறது.

ஜூன் மாதத்தில், தீங்கு விளைவிக்கும் நடத்தையின் அடிப்படையில் 16.6 லட்சத்திற்கும் அதிகமான பயனர் கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்ததாக நிறுவனம் அறிவித்துள்ளது. உங்கள் ஸ்மார்ட்போன் தகவலைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள, நீங்கள் எந்தவொரு நம்பிக்கை இல்லாத மூன்றாம் தரப்பு குளோன் ஆப்ஸ்களையும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

Google Play Store இலிருந்து அதிகாரப்பூர்வ பயன்பாடுகளை மட்டுமே வாசகர்கள் நிறுவுமாறு பரிந்துரைக்கிறோம். பயனர்கள் சில கூடுதல் அம்சங்களுக்காக ஆசைப்பட்டு, உங்கள் போனில் உள்ள தரவு மற்றும் தனியுரிமை பாதுகாப்பைத் தவறவிடாதீர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதிகாரப்பூர்வமற்ற ஆப்ஸ் உங்களுக்கு பாதிப்புகளைப் ஏற்படுத்தும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். GB WhatsApp உங்கள் போனில் இருந்தால், உடனே அதை டிலீட் செய்யுங்கள்.
-நன்றி தமிழ் gizbot-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மட்டக்களப்பில் சூரிய மின்னுற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

பிரிட்டிஷ் மன்னராகிறார் மூன்றாம் சார்ள்ஸ்