in

சந்திரனில் பெருமளவில் சோடியம் – ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

சந்திரனில் பெருந்தொகையான சோடியம் படிவுப் பகுதி காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் சந்திரயான்–2 செய்மதியின் கதிர்வீச்சு ஸ்பெக்ட்ரோ மீட்டரைப் பயன்படுத்தி இதுவே முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் ‘அஸ்ட்ரோபிசிகல் ஜேர்னல் லெட்டர்ஸ்’ வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையொன்றில், பெங்களுரில் உள்ள இஸ்ரோவின் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு) யூ.ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அதி உணர்திறன் மற்றும் செயற்திறன் மிக்க கருவியில் சந்திரனில் சோடியப் படிவு காணப்படும் பகுதி தெளிவாகப் பதிவாகியுள்ளது.

அத்தோடு சந்திரனில் காணப்படும் பலவீனமான சோடிய அணுக்களது மெல்லிய பகுதியில் இருந்து சமிக்ஞை எழுவதாகவும் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (TK)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

விலங்குகளுக்கு வரி – நியூசிலாந்தில் அறிவிப்பு

திவுரும்பொல, மனாருல் ஹுதாவின் மாதாந்தக் கருத்தரங்கு