in

ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக அப்துல் லதீப் தெரிவு

ஈராக்கில் பல மாதங்கள் நீடிக்கும் அரசியல் இழுபறியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக அப்துல் லதீப் ரஷீத் பாராளுமன்றத்தால் கடந்த வியாழக்கிழமை (13) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதி உடன் முஹமது ஷியா அல் சுதானியை புதிய பிரதமராக அறிவித்துள்ளார். நாட்டில் ஓர் ஆண்டாக அரசியல் இழுபறி நீடிக்கும் நிலையில் பெரும்பான்மையாக உள்ள ஷீயா தரப்புக்களிடையே சமரசத்தை ஏற்படுத்தும் சவாலை அவர் எதிர்கொண்டுள்ளார்.

சுதானி புதிய அரசை அமைப்பதற்கு 30 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஈராக்கின் அதிகாரப் பகிர்வு முறையின்படி நாட்டின் ஜனாதிபதி குர்திஷ் தரப்பில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதோடு பிரதமர் ஷீயா ஒருவராகவும் சபாநாயகர் சுன்னி முஸ்லிம் ஒருவராகவும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 33 பேர் உயிரிழப்பு

உலகச் சந்தையில் மந்த நிலையை அடையும் பொருளாதாரம் – காரணம் இது தான்