in

உலகச் சந்தையில் மந்த நிலையை அடையும் பொருளாதாரம் – காரணம் இது தான்

எண்ணெய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் உலக அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என சர்வதேச எரிசக்தி அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகத்தின் மிகப்பெரிய தயாரிப்பாளர்கள், எண்ணெய்க்கு கட்டுப்பாடுகள் விதித்திருப்பதை அது சுட்டிக்காட்டியது. எண்ணெய் விலை உயர்வால் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம்.

ஏற்கனவே ஏற்பட்டுள்ள பணவீக்கம், அதிகரித்துள்ள வட்டி வீதங்களால் நிலைமை மோசமாகக்கூடும்.

ரஷ்யா உட்பட முக்கிய நாடுகளிலிருந்து விநியோகத்தைக் கையாளும் ஒபெக் பிளஸ் குழு அதன் தினசரி உற்பத்தி இலக்குகளில் 2 மில்லியன் பீப்பாய் குறைக்கவிருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது. இது உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கக் காரணமாகும் என்று அது எச்சரித்துள்ளது.

உலக அளவில் அதிகரிக்கும் பணவீக்கத்தின் மத்தியில், சவூதி அரேபியா ரஷ்யாவுடன் இணைந்து எண்ணெய் விலையை அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. (TK)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக அப்துல் லதீப் தெரிவு

போரத்தொட்ட பாலர் பாடசாலையின் வருடப்பூர்த்தி விழாவும், இல்ல விளையாட்டுப் போட்டியும்