in

LoveLove CuteCute LOLLOL OMGOMG

போரத்தொட்ட பாலர் பாடசாலையின் வருடப்பூர்த்தி விழாவும், இல்ல விளையாட்டுப் போட்டியும்

கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு போரத்தொட்ட (பலகத்துரை) சுலைமானியா மற்றும் முனவ்வரா பாலர் பாடசாலையின் 37வது வருடப் பூர்த்தி விழாவும் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியும் கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அல் பலாஹ் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது .

அதிபர் ரிஸ்மினா இஸ்லாஹி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பலகத்துரை பள்ளி வாசல் நிர்வாக சபை தலைவர் அல் ஹாஜ் கலீல் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

ஸ்தாபகர் அல் ஹாஜ் எம் எஸ் நிசாம் தீன் மற்றும் கலாநிதி மௌலவி அப்துஸ் சத்தார், மௌலவி எம். என். நிஸ்தார் ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

வழமைபோன்று இர்ஷாத் ஆசிரியர்,
அஜ்மல் ஆசிரியர், மற்றும் சப்ரான்
ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-ஷாம் மௌலானா-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

உலகச் சந்தையில் மந்த நிலையை அடையும் பொருளாதாரம் – காரணம் இது தான்

மண்முனைப்பற்றில் கலாசார மற்றும் இலக்கிய விழா