in

தடைப்பட்டது எதுன்கஹகொடுவ பஸ் போக்குவரத்து

குளியாப்பிடியிலிருந்து எதுன்கஹகொடுவயினூடாக தும்மளசூரிய, மாதம்பை வரை சென்று திரும்பவும் மாதம்பையிலிருந்து திவுரும்பொல எதுன்கஹகொடுவ பராகெதர ஊடாக குளியாபிடிய செல்லும் (பஸ்) பேரூந்து சேவை கடந்த சில நாட்களாக கந்தயாய பகுதியில் பழுதடைந்த பாதையின் பகுதி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருவதால் தடைப்பட்டுள்ளது.

குறித்த பஸ் ரூட்டில் உள்ள கிட்டத்தட்ட எட்டு பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் இப்பிரதேச வியாபாரிகள் தொழிலாளர்கள் வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
பாதை புனர்நிர்மாணம் செய்து முடியும் வரை குறைந்த பட்சம் கந்தயாய பன்சலையிலிருந்து தும்மளசூரிய வரையேனும் பஸ் போக்குவரத்தை மேற்கொள்ள ஏற்பாடு செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஷாம் மௌலானா-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஆட்டோ சாரதிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது

பிரிட்டன் பிரதமர் பதவி விலகல் – காரணம் இதுதான்