in

மீண்டும் அதிகரிக்கிறது பறவைக் காய்ச்சல்

நெதர்லாந்தில் பறவைக் காய்ச்சல் பரவுவதால் நாட்டின் தென்பகுதியில் உள்ள பண்ணையில் 300,000 கோழிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தில் செப்டம்பரிலிருந்து சுமார் 30 பறவைக் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகின. அந்தவகைப் பறவைக் காய்ச்சல் மரணத்தை விளைவிக்கக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டது.

பறவைக் காய்ச்சலால் நெதர்லாந்தில் இதுவரை 6 மில்லியன் பறவைகள் கொல்லப்பட்டன.

கடந்த ஆண்டு ஒக்டோபர் இறுதியில் அந்த வகைப் பறவைக்காய்ச்சல் நெதர்லாந்தில் பரவத் தொடங்கியதாக டச்சு உணவுப் பாதுகாப்பு ஆணையகம் தெரிவித்தது.

இதேவேளை பிரான்ஸிலும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
(TK)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கல்பிட்டி அல் அக்ஸாவில் மாபெரும் மீலாத் விழா

ஆட்டா ஓட்டுநர்களுக்கான முதற்கட்ட அதிர்ஷ்டம்