in

2023-ல் Google Chrome இயங்காதா? வைரலாகும் உண்மைத் தகவல்

உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் நீங்கள் Google Chrome Browser தளத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்தக் கட்டுரையை மிகவும் கவனமாகப் படியுங்கள்.சமீபத்தில் வெளியான ஒரு புதிய தகவலின் படி, வரும் 2023 ஆம் ஆண்டு முதல் சில லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் சாதனங்களில் இனி Google Chrome பிரௌசர் அம்சம் பாதுகாப்பாக செயற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 2023 ஆம் ஆண்டு முதல் துவங்கி, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 இல் இயங்கும் சாதனங்களில் இனி Google Chrome அம்சம் வேலை செய்வதை நிறுத்தும் என்று மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது ஃபோரம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான கூகிளின் கூற்றுப்படி, வாடிக்கையாளர்கள் Google Chrome வெப் பிரௌசரை தொடர்ந்து பயன்படுத்த Windows 10 அல்லது 11 உடன் புதிய அமைப்பைப் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற பிப்ரவரி 7, 2023 அன்று தற்காலிகமாகத் திட்டமிடப்பட்ட Google Chrome v110 வெளியீட்டைத் தொடர்ந்து, பழைய Google Chrome சேவைகள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது Windows 7 ESU மற்றும் Windows 8.1 நீட்டிக்கப்பட்ட ஆதரவிற்கான Microsoft இன் ஆதரவுடன் ஜனவரி 10, 2023 அன்று செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த திகதிக்கு பிறகு Google Chrome பழைய விண்டோஸ் சாதனங்களில் முழு பாதுகாப்புடன் இயங்காது.

Google Chrome இன் பழைய பதிப்புகள் Windows 7 மற்றும் 8.1 உடன் PC-களில் தொடர்ந்து வேலை செய்யும் என்று கூகுள் கூறுகிறது. ஆனால், பழைய வெர்ஷன் வெப் பிரௌசர்கள் 2023 முதல் எந்தவொரு புதுப்பிப்புகளையும் பெறாது என்று நிறுவனம் தெளிவாகக் கூறியுள்ளது. அதாவது, அடுத்தடுத்து வரக்கூடிய அப்டேட்கள் என்று எதையும் நிறுவனம் வெளியிடாது என்பதே இதற்கான அர்த்தமாகும்.சரியான அப்டேட் இல்லாத பிரௌசரை யூஸ் செய்வது பாதுகாப்பானதல்ல என்பதையும் நிறுவனம் எச்சரித்துள்ளது.

Chrome இன் புதிய பதிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டுமா?
நீங்கள் தற்போது Windows 7 அல்லது Windows 8.1 இல் இருந்தால், சமீபத்திய பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் Chrome அம்சங்களை நீங்கள் தொடர்ந்து பெறுவதை உறுதிசெய்ய, அந்தத் திகதிக்கு முன் ஆதரிக்கப்படும் Windows வெர்ஷனிற்கு செல்லுமாறு கூகிள் அதன் பயனர்களை ஊக்குவிக்கிறது.Google Chrome இன் அனைத்து பாதுகாப்பு புதுப்பிப்புகளையும் பெற, Chrome இன் புதிய பதிப்புகளைப் பயனர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கிடையில், மைக்ரோசொப்ட் Windows 7 ESU (Extended Security Update) மற்றும் Windows 8.1 -க்கான ஆதரவை ஜனவரி 10, 2023 அன்று நிறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Windows 7 ஆதரவு ஜனவரி 2020 இல் முடிவடைந்தாலும், அது சில பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. விண்டோஸ் 8.1 பயனர்கள் இன்னும் புதிய OS-க்கு மாறவில்லை என்றால், உடனே மாறும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் எந்த ESU-களையும் பெற மாட்டார்கள் என்று நிறுவனம் கூறியுள்ளது.

மைக்ரோசொப்ட் பயனர்கள் விண்டோஸ் 11 உடன் இயங்கும் புதிய லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் சாதனங்களை வாங்கப் பரிந்துரைக்கப்படுகிறார்கள். ஏனெனில் பழைய சாதனங்களில் புதிய OS-க்கு மேம்படுத்துவது உங்கள் சிஸ்டம்மை மெதுவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. Windows 8.1 இல் இயங்கும் கம்ப்யூட்டர்களில் கூகிள் குரோம் இன்னும் செயல்படும் என்று Microsoft கூறுகிறது. ஆனால், இது பாதுகாப்பானதல்ல.

ஆனால், மைக்ரோசொப்ட் இனி எந்தச் சிக்கல், மென்பொருள் புதுப்பிப்புகள் அல்லது பாதுகாப்பு புதுப்பிப்புகள் அல்லது திருத்தங்களுக்குத் தொழில்நுட்ப ஆதரவை வழங்காது. ஒருவேளை, Windows 8.1 இல் இயங்கும் கம்ப்யூட்டர் இல் தொடர்ந்து குரோம் பயன்படுத்துகிறோம் என்றால் என்னவாகும்?முன்பே சொன்னது போல, உங்களுக்கு மென்பொருள் மற்றும் பாதுகாப்பு மேம்படுத்தல்கள் எதுவும் கிடைக்காது. இதனால், உங்கள் PC வைரஸ்கள் மற்றும் மால்வேர்களால் அதிகமாகத் தாக்கப்படக்கூடிய ஆபத்து மற்றும் சிக்கல்கள் இதில் அதிகமாக இருக்கிறது.

இந்தப் பதிவை வாசித்துப் பயன் பெற்ற உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வளவாளர்களை வலுப்படுத்தும் சுனாமிக்கான தயார்நிலை செயலமர்வு

ட்விட்டர் சமூகத் தளம் விலை போனது – மோதலின் முடிவும் வெளியானது