in

இனி Twitter ற்கு கட்டணமாமே!

ட்விட்டரைப் பயன்படுத்த பயனாளர்கள் ஒவ்வொருவருக்கும் வரி அறவிடுவதற்கு எலன் மாஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இத்தகவலானது ட்விட்டர் பயனாளர்களுக்கு அதிர்ச்சித் தகவலாக இருக்கும் நிலையில் இன்னும் குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரமே இலவசமாக கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் எலன் மாஸ்க் ட்விட்டரை வாங்கியதைத் தொடர்ந்தே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ட்விட்டரைப் பயன்படுத்த அனைத்து பயனாளர்களும் வரி செலுத்துவது மட்டுமன்றி ப்ளூ டிக் சேவையை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு வரிக் கட்டணங்களும் வெளியாகியுள்ளது.

இதன்போது ட்விட்டரில் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகளை உபயோகிப்பவர்களுக்கு எச்சரிக்கை இன்றி அவர்கள் தடை செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.

ட்விட்டர் பயனர்களின் உண்மைத் தன்மைக்கு எலன் மாஸ்க் இன் இந்த நடவடிக்கையானது உகந்ததாக இருக்கும் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நேபாளத்தில் பூகம்பம். 6 பேர் உயிரிழப்பு

யாருக்கும் தெரியாமல் WhatsApp இல் இதை செய்யலாம்