
நியூசிலாந்தில் 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு சிகரெட் அல்லது புகையிலை உற்பத்திகளை வாங்கத் தடை விதிக்கும் புதிய சட்டம் ஒன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்மூலம் சிகரெட் வாங்குவோர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் சுருங்கி 2050 ஆம் ஆண்டாகும்போது சிகரெட் வாங்குவோரின் மிகக் குறைந்த வயது 40ஐ எட்டும் நிலை ஏற்படும்.
புகை பிடிப்போர் அற்ற எதிர்காலத்தை நோக்கிய நடவடிக்கை இது என்று சுகாதார அமைச்சர் அயேஷா வெரல் குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்தில் தினசரி புகை பிடிப்போர் எண்ணிக்கை வரலாற்று ரீதியில் வீழ்ச்சி கண்டு 8 வீதமாக உள்ள நிலையிலேயே இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோன்று புகையிலை விற்பனையாளர்களின் எண்ணிக்கையை 6,000ல் இருந்து 600ஆக மட்டுப்படுத்துவதற்கும் இந்த சட்டத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. (TKN)
