Local News

வணிகத்துறையில் வரலாறு படைக்கிறது அரக்கியால FZ கல்வி நிலையம்

-சப்ராஸ் அபூபக்கர்-

குருநாகல் மாவட்டத்தில் விசிநவ, அரக்கியால பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் வணிகத்துறைக்காய் ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்வி நிலையம் தான் FZ அகடமி.

தமிழ் பேசும் சமூகத்திலிருந்து நல்ல கணக்காளர்களையும், கணக்கியல்துறை பட்டதாரிகளையும் உருவாக்குவதே கல்வி நிலையத்தின் இலக்காக இருக்கின்றது.

அதனடிப்படையில் இன்று சனிக்கிழமை (2022.12.24) 2024 ம் ஆண்டில் வர்த்தகத்துறையை தெரிவு செய்யும் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு மிகச்சிறப்பாய் இடம்பெற்று முடிந்தது.

நாடுபூராகவும் இருந்து சுமார் 95 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு இந்தக் கல்விநிலையத்தின் ஆலோசகர்களான இஸ்மாயில் சேர் (ஓய்வுபெற்ற அதிபர் – மதீனா தேசிய பாடசாலை, சியம்பளாகஸ்கொடுவ), முதம்மில் சேர் (ஓய்வுபெற்ற அதிபர் – கெகுணகொல்ல தேசிய பாடசாலை) ஆகியோர்களது தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விசிநவ பிரதேசத்தின் பிரபலமான கணக்காய்வாளர் சகோதரர் இனாமுல்லாஹ், கெளரவ அதிதியாக ஏசியன் குரூப் கம்பனி நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாஜா ஹாஜியார், விஷேட அதிதியாக ஐடியல் லான்ட்ஸ் அன்ட் ஹோம்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ரனீஸ் ஹாஜியார் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

FZ கல்வி நிலையத்தின் பணிப்பாளர்களான சஹ்ரான் இஸ்மாயில், பர்ஹான் இஸ்மாயில் ஆகியோர்கள் இந்த செயற்திட்டத்தின் முழுமையான நோக்கம் பற்றியும், கல்வித் திட்டம் பற்றியும் மிகச்சிறப்பான தெளிவூட்டலை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குருநாகல் மாவட்டத்தில் AAT பதிவு செய்யப்பட்ட முதலாவதும், ஒரே கல்வி நிறுவனமுமாக FZ கல்வி நிறுவனம் திகழ்கின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button