
(ஏரூர் உமர் அறபாத் )
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் தகவல் அறியும் உரிமை சட்டத்தினைப் பயன்படுத்தி எவ்வாறு ஊழலற்ற சமுதாயத்தினை உருவாக்கலாம் மற்றும் உரிமைகளை பாதுகாக்கலாம் போன்ற விடயங்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வு
(06 – 01 – 2023) மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்று நடைபெற்றது…
மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பிலும், அந்த சட்டத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பிலும் விளக்கப்பட்டதுடன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பயன்கள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

இப்பயிற்சி செயலமர்வில் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் “உபாலி அபேரத்ன” மற்றும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான சட்டத்தரணி “கிஷாலி பின்டோ ஜயவர்தன”, சட்டத்தரணி “ஜகத் லியன ஆராச்சி”, “ஏ. மொஹமட் நஹியா” மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக செயலாளர் “நவேஸ்வரன்” உட்பட பலர் கலந்து கொண்டனர்.
