BusinessLocal News

எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஹம்பந்தோட்டையில்

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் எரிபொருள் சுத்திகரிப்பு மற்றும் அதனோடு இணைந்த உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட மேற்படி திட்டத்திற்காக, முதலீடுகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க பொருத்தமான முதலீட்டாளர்களை தெரிவுசெய்வதற்கான  விலைமனுக் கோரலை மேற்கொள்வதற்கும் அடிப்படை தகைமையை பூர்த்தி செய்யும் முதலீட்டாளர்களுக்கு விரிவான யோசனைகளை பெற்றுக் கொள்வதற்குமாக எரிசக்தி, மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றுள்ள அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். (TKN)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button