in ,

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒப்பமிட மறுப்பு, கூட்டத்தில் தர்க்கம்

இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்காக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நாளை இங்கிலாந்து பயணமாகவுள்ளனர். இந்நிலையில் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக இலங்கை கிரிகட் வீரர்களுக்கும், கிரிகட் அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று காலை தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் புதிய வருடாந்த ஒப்பந்தங்களில் இடமாற்ற சிக்கல்கள் தொடர்பாக இங்கிலாந்து சுற்றுப்பயண ஒப்பந்தத்தில் கையெழுத்திட வீரர்கள் மறுத்து விட்டாலும் அவர்கள் பணம் இல்லாமல் கூட போட்டியை விளையாட ஒப்புக் கொண்டிருந்தனர். இதேவேளை வீரர்கள் கையெழுத்திடா விட்டால் அவர்கள் 3 ஆண்டுகள் இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஹோட்டலை விட்டு வெளியேறும் படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு கலந்துரையாடல் மூலம் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு மாலை வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளதாக நெருக்கமான ஒரு வட்டாரம் “நியூஸ்வயர்” செய்திச்சேவைக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிய வருகிறது. (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

பொலிஸார் தாக்கியே கணவர் மரணம், மனைவி வாக்குமூலம்

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம்?