in

பொலிஸார் தாக்கியே கணவர் மரணம், மனைவி வாக்குமூலம்

பாணந்துறை வடக்கு வத்தேபொல பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 48 வயது நபர் சந்தேக நபர் ஒருவர் மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை, பயணத்தடை மீறியமை தொடர்பிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்து அழைத்துச் செல்கின்ற நேரம் பொலிஸ் வாகனத்திலிருந்து குதித்து காயமடைந்ததாகவும் பின்னர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இறந்தவரின் மனைவி தனது கணவர் பொலிஸ் வாகனத்திலிருந்து குதித்ததில்லை என்றும் மாறாக அவரை கைது செய்த காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டே இறந்துள்ளார் எனவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இந்நிலையில் பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இலங்கை முதலீட்டு மாநாடு இன்று ஆரம்பம்

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒப்பமிட மறுப்பு, கூட்டத்தில் தர்க்கம்