in

இலங்கைக்கு திரும்பி வரவிருப்பவர்களுக்கான அறிவித்தல்

இலங்கை சுகாதார அமைச்சு வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு பொருந்தக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடிமக்கள் தங்கள் வீடுகளில் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். கடந்த 14 நாட்களில் இந்தியா, வியட்நாம், தென்னாபிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து போக்குவரத்து செய்தவர்களுக்கு இந்த வீட்டு தனிமைப்படுத்தல் திட்டம் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முழுமையாக தடுப்பூசி போடாமல் வருபவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் விடுதிகளில் அல்லது நிலையங்களில் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா விதிமுறைகளின் கீழ் பயணிப்போருக்கு இந்த நடைமுறை செல்லுபடியாகாது எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.(NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

271110 பேர் இதுவரையில் பாதிப்பு

இலங்கை முதலீட்டு மாநாடு இன்று ஆரம்பம்