in ,

கலர் கலரில் ஸ்டிகர் தயார்

பயணக் கட்டுப்பாட்டுக் காலத்தில் கொழும்பு நகரத்திற்குள் நுழையும் அத்தியாவசிய சேவை வாகனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் முறையை மாற்றியமைக்க காவற்துறை முடிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் நாளை இந்த புதிய ஸ்டிகர் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதோடு புதிய ஸ்டிக்கர் அமைப்பு முழு பயணக் கட்டுப்பாட்டு காலத்திற்கும் செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 11 துறைகளுக்கு வெவ்வேறு வர்ணங்களின் கீழ் ஸ்டிக்கர்கள் வழங்கப்படும். சுகாதார சேவைகள் – பச்சை முத்தரப்பு / போலீஸ் – நீலம் அத்தியவசிய பொருட்கள் விநியோகம் – சிவப்பு அத்தியவசிய சேவை பொருட்கள் – மஞ்சள் இறக்குமதி / ஏற்றுமதி – ப்ரவ்ன் (Brown) உணவு விநியோகம் – சாம்பல் தனியார் துறை – ஊதா ஊடகம் (Media) – செம்மஞ்சள் (Orange) விமான நிலையப் பயணம் – வெள்ளை அவசரநிலை – கருப்பு இதேவேளை கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு இந்த ஸ்டிக்கர்கள் நாளை முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.(NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

சாரதிகள் அவதானம்

இதுவரையில் 1742 மரணங்கள் பதிவு