in

சாரதிகள் அவதானம்

பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தும் சாரதிகளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே, பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார். இதேவேளை நேற்று சனிக்கிழமை மாத்திரம் 7 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிலும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளதாகவும், அவர்கள் அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்பு பட்டவர்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடிப்படையாக கொண்டு பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், விபத்துக்குள்ளாகும் நபர்களின் நிலைமையினை ஆராய்ந்து, நாடளாவிய ரீதியில் விதிகளை மீறி செயற்படும் சாரதிகளை இனங்கண்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார தரப்பினருடன் இணைந்து இவ்வாறு தனிமைப்படுத்த நடவடிக்கையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

1921 தொற்றளர்கள் இன்றைய நாளில் அடையாளம்

கலர் கலரில் ஸ்டிகர் தயார்