அரசாங்கத்தின் 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தும் வேலைத் திட்டத்துக்கு அமைய உடுநுவர, வெலம்பொட மு.ம.வி. உள்வாங்கப்பட்டு ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில் கல்லூரி அதிபர் அல்ஹாஜ் அனஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது பொதுஜன பெறமுனவின் உடுநுவர தொகுதி அமைப்பாளரும், அமைச்சரும் ஆகிய பேராசிரியர் ரன்ஜித் பண்டார விசேட அதிதியாக கலந்து கொண்டார்.
இதேவேளை இந்நிகழ்வில் உடுநுவர பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் ரஜப் ஹாஜியார் , வட்டதெனிய மஸ்ஜித் நிர்வாக சபைத் தலைவர் கியாஸ் ஹாஜியார், வெலம்பொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வெலம்பொட மற்றும் அமீனியா பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட இன்னும் பல அரசாங்க உயர் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன் போது உரையாற்றிய ரன்ஜித் பண்டார முன்னாள் பிரதேச சபை உப தலைவர் ரஜப் ஹாஜியார் அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க இந்த பாடசாலையை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்த தெரிவு செய்வதுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் பாடசாலை பெயர் மாற்றம் பற்றிய கலந்துரையாடலின் போது பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் M.S.M.ஸாஹிர் அவர்கள் ஜனாதிபதி கல்லூரி எனும் பெயரை முன்மொழிய அதனை அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவிக்கிறது. -ஸாமில் ஸியாத்-