in ,

கஹடோவிட்டவில் மேர்சி உயர் கல்வி நிறுவன மாணவர் ஒருவர் மரணம்

நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தொடர் மழை காரணமாக கம்பஹா மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று பெய்த கன மழை காரணமாக நிட்டம்புவ பொலிஸ் பிரிவுற்குற்பட்ட கஹடோவிட்டவில் மாணவர் ஒருவர் வெள்ள நீரில் மூழ்கி பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பலியான மாணவன் புத்தளம் மேர்சி உயர்கல்வி நிறுவனத்தில் கற்றுக்கொண்டிருக்கக்கூடிய 18 வயதான மொஹமட் லுக்மான் ஆகிப் அனாம் என இனங்காணப்பட்டுள்ளார். மரணித்த உடலைக் கண்டெடுப்பதற்கு பிரதேச மக்கள் பெரும் சிரமப்பட்டார்கள் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை இன்றைய அதிகாலை மாவனெல்ல பகுதியில் நடந்த மண் சரிவில் பலியானவர்கள் 04 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன. -ரம்ஸான், கஹடோவிட்ட-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கொரோனா தாக்கம் தொடர்பான வரைபடம் வெளியாகியது